கணவனே கண்கண்ட தெய்வம்.. இன்று வரலட்சுமி விரதம்!

varalakshmiv

திருமாலின் துணைவியான மகாலட்சுமி, நமக்கு பல வரங்களைத் தருபவள். வரங்கள் தருவதால் அவள் வரலட்சுமி என்னும் திருநாமம் பெறுகிறாள். செல்வத்துக்கு அதிபதியான இவளை விரும்பாதவர்களே இல்லை. துறவியான ஆதிசங்கரர் கூட, தனக்கு நெல்லிக்கனியை பிச்சையாக அளித்த பெண்மணிக்காக கனகதாரா ஸ்தோத்திரம் பாடி, லட்சுமியை வரவழைத்தார்.கிருஷ்ணனைக் காண குசேலர் வந்த போது, அவர் கொண்டு வந்த அவலை வாயில் போட்டார். குசேலருக்கு அன்றைய நிலையில் பொருள் தேவைப்பட்டது. தன் கணவரிடம் பொருள் நாடி வந்து உள்ளதை அறியாதவளா என்ன மகாலட்சுமி. உடனே தன் கடைக்கண் பார்வையில் குசேலர் வசித்த கிராமம் இருந்த திசை நோக்கி திரும்பினாள். அந்த ஊரே செல்வத்தால் நிறைந்தது.பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் தருபவள் அவளே. அவளே சீதையாக, ருக்மிணியாக பூமிக்கு வந்து வாழ்ந்து காட்டினாள். சீதையாக பிறந்த போது, தன் கணவருடன் காட்டிற்கு சென்றாள்.

கணவனே கண்கண்ட தெய்வமென அவரைப் பிரியாமல் வாழ்ந்தாள். திருப்பதி ஏழுமலையான் மார்பில் தொங்கும் ஆரத்தை லட்சுமி ஆரம் என்பர். லட்சுமி தாயார் அவரது இதயத்திலேயே குடியிருப்பதாக ஐதீகம்.கணவனை விட்டு பிரியாதவர்களே சுமங்கலிகள். லட்சுமி தாயார் எப்படி திருமாலின் மார்பை விட்டு பிரியாமல் இருக்கிறாளோ, அதுபோல சுமங்கலிகளும் தங்கள் கணவரின் இதயத்தில் இடம் பிடித்து அவர்களோடு ஒற்றுமையாக வாழ வரலட்சுமி நோன்பை அனுஷ்டிக்கிறார்கள். இந்த இனிய நாளில், எல்லாரும் தீர்க்க சுமங்கலிகளாக வாழ லட்சுமி தாயாரை வேண்டுவோம்

Leave a Reply