சென்னை அப்பல்லோ வந்த அதானியின் மகன்!

சென்னை அப்பல்லோ வந்த அதானியின் மகன்!

karan-adaniகுஜராத்தை சேர்ந்த அதானி நிறுவனத்தின் சூரியசக்தி மின்உற்பத்தித் திட்டத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ம் தேதியன்று தொடங்கிவைத்தார். அன்றைய தின இரவே, உடல்நலக்குறைவு காரணமாக, அப்போலோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வரின் உடல்நிலை குறித்து அறிய அதானி நிறுவனத்தின் நிறுவனர் கவுதம் அதானியின் மகனும், அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியுமான கரண் இன்று சென்னை வந்தார்.

இதுகுறித்து கரண் அதானி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

ஆமதாபாத்தில் இருந்து, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காகவே சென்னை வந்துள்ளேன். இங்கு மருத்துவமனையில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையை சந்தித்தேன். அவருடன் தமிழக சுகாதாரத் துறை அமைச்சரும் இருந்தார். இருவருமே, முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை நல்ல முறையில் தேறி வருவதாகக் கூறினர்.

ஜெயலலிதா அவர்கள், வெகு விரைவில் பூரண குணமடைந்து, மக்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கரண் அதானி தெரிவித்துள்ளார்.

Leave a Reply