வயிறு தொடர்பான நோய்கள் குணமாக்கும் கரந்தை

download

தமிழகத்தின் வளமான நிலங்களின் வரப்புகளிலும், நெற்பயிர் அறுவடைக்கு பிறகு வயல்களிலும் முளைத்து கிடக்கும். நல்ல மணம் கொண்ட சிறு செடியினம். மொட்டை கரந்தை என்ற பெயர் இதற்கு உண்டு. குத்துக்கரந்தை, கொட்டைகரந்தை, சிறுகரந்தை, சிவகரந்தை, சுனைக்கரந்தை, சுரைக்கரந்தை, சூரியக்கரந்தை, விஷ்ணுகரந்தை, நாறும் கரந்தை என பல்வேறு பெயர்களால் வழங்கப்படும் கரந்தை பல்வேறு மருத்துவ பயன்களை தன்னுள் கொண்ட கற்பக மூலிகையாகும்.

மலமிளக்கியாகவும், தாது வெப்பம் தணிக்கவும் பயன்படும். நுரையீரல்நோய், யானைக்கால் நோய், ரத்தசோகை, பெண்களின் கர்ப்பபை வலிகள், மூலம் மூச்சிரைப்பு, வெண்புள்ளி, வயிற்றுக்கடுப்பு, வாந்தி இருமல், விரைவீக்கம், பெருங்குடல்வலி, தளர்ந்து தொங்கும் மார்பகம், மனக்கோளறுகள் ஆகியவற்றை நீக்க வல்லது. ரத்தத்தை சுத்தப்படுத்தி, இதயநோய்களை நீக்கும் ஆற்றல் கொண்டது. கொட்டை கரந்தையின் பூக்காத செடிகளை எடுத்து வந்து நிழலில் காயவைத்து சூரணம் செய்து கொள்ளவேண்டும்.

இதில் 5 கிராம் அளவில் எடுத்து அதில் பாதியளவிற்கு கற்கண்டை தூள்செய்து சாப்பிட வெள்ளை, உள்ரணம், கிராணி, கரப்பான் ஆகியவை தீரும். தொடர்ந்து சாப்பிட்டு வர மூளை, இதயம், நரம்பு ஆகியவற்றை பலப்படுத்தும். கொட்டை கரந்தையின் பட்டையை அரைத்து மோரில் கலந்து குடித்தால் மூலம் குணமாகும். சூரணம் செய்து உண்பதால் தலை, மூளை, இதயம் வலிமை அடையும்.

இதன் கசாயத்துடன் சீரகத்தை பொடித்து போட்டு காலை, மாலை 100மிலி வீதம் குடித்து வந்தால் வயிறு தொடர்பான அனைத்து நோய்கள் நீங்கும். கொட்டை கரந்தையின் சமூலத்தை இடித்து சூரணம் செய்து அதில் 4 கிராம் அளவில் காலை மாலை சாப்பிட பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை மற்றும் கரப்பான் நோய்கள் தீரும். இதன் இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து வேளைக்கு ஒரு கிராம் எடை வீதம் நாள்தோறும் காலை மாலை சாப்பிட தோல்நோய்கள் அனைத்தும் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை பெருகும்.

Leave a Reply