30 ஆண்டுகளாக தினமும் செல்பி எடுக்கும் நியூயார் மனிதர்
செல்பி என்பதே கடந்த ஒருசில ஆண்டுகளாகத்தான் அனைவருக்கும் தெரியும். குறிப்பாக ஸ்மார்ட்போனில் ஃபிரெண்ட் கேமிரா வந்தபின்னர்தான் உலகம் முழுவதும் செல்பி ஃபேமஸ் ஆனது.
ஆனால் ஸ்மார்ட்போனே அறிமுகம் இல்லாத காலத்தில் இருந்து சுமார் 30 ஆண்டுகளாக தினமும் ஒருவர் செல்பி எடுத்து வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த கேம்பிரிட்ஜ் என்றா பகுதியை சேர்ந்தவர் 64 வயது கார்ல் பாடன். அவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பே செல்பி எடுக்கத் தொடங்கியுள்ளார். முதன்முதலாக 35 எம்.எம் கேமராவில் செல்பி எடுக்க முயற்சி செய்துள்ளார். பின்னர் அதன் மீது மோகம் கொண்ட கார்ல் பாடன், தினந்தோறும் ஒரு செல்பி என கடந்த 30 ஆண்டுகளாக எடுத்து வருகிறாராம்.
மேலும் அவர் இதுவரை எடுத்த செல்பி புகைப்படங்களை பொதுமக்கள் பார்வைக்கு பகிரும் வகையில் புகைப்பட கண்காட்சியாக வைத்துள்ளார்.