பன்னீர் செல்வத்திற்கு சூடு சொரணை இருந்தால் பதில் சொல்லட்டும். கருணாநிதி ஆவேசம்

சகாயம் ஐ.ஏ.எஸ் விசாரணை குறித்த வழக்கில் எனக்கு பதில் சொல்லாமல் நீதிபதிகள், நாட்டு மக்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு சூடு சொரணை இருந்தால் பன்னீர்செல்வம் பதில் சொல்லட்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
op and karunanidhi
இதுகுறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள கேள்வி-பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பதில்:- அதிகாரி சகாயம் ஐ.ஏ.எஸ்., விசாரணை வேண்டுமென்று நானா கேட்டேன். டிராபிக் ராமசாமி கேட்டார். அந்த விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று உயர் நீதிமன்ற நீதிபதிகளும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் உத்தரவிட்டார்கள். அதற்கு பன்னீர்செல்வத்தின் பதில் என்ன என்று கேட்டால் – “உப்பு இருக்கிறதா என்று கேட்டால், பப்பு இருக்கிறது” என்று சொல்லும் மளிகைக் கடைக்காரரைப் போல – நீதிபதிகளின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் எனக்கு பதில் கூறிக் கொண்டிருக்கிறார்.

அ.தி.மு.க. அரசு, நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு, நியமித்த சகாயம் விசாரணையிலும் எவ்வளவு தவறுகள் என்பதைப் பற்றி எதிர்க்கட்சிக்காரர்கள் எல்லோரும் கேட்கிறார்கள். அதற்கெல்லாம் பன்னீர்செல்வத்தின் பதில் என்ன?. சகாயம் விசாரணைக்கான அரசாணையில், தமிழகம் முழுவதும் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறாமல் மதுரை மாவட்டத்தில் மட்டும் விசாரணை நடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டிருப்பது, தமிழகம் முழுவதும் சகாயம் விசாரணை நடத்தினால் மாட்டிக்கொள்வோம் என்பதால்தானே?

தற்போது அதனால் தான் திட்டவட்டமான தீர்ப்பைப் பெறலாம் என்று டிராபிக் ராமசாமி தமிழகம் முழுவதிலும் விசாரணை நடத்த வேண்டுமென்று வேறொரு புதிய வழக்கினைத் தொடுத்திருப்பதாகச் செய்தி வந்துள்ளது. பன்னீர்செல்வம் எனக்கு பதில் சொல்லிக் கொண்டு காலத்தை கழிக்காமல், நீதிபதிகளும், வழக்கறிஞர்களும், நாட்டு மக்களும் கேட்கின்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல சூடு சொரணை இருந்தால் முயன்று பார்க்கட்டும்” என்று கூறியுள்ளார்.

Leave a Reply