கருணாநிதி உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனையின் அறிக்கை
திமுக தலைவர் கருணாநிதி இன்று அதிகாலை சென்னை ஆழ்வார்ப்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பதை பார்த்தோம். இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்த அறிக்கை ஒன்றை சற்று முன் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஊட்டச்சத்து, நீர்ச்சத்து குறைவு காரணமாக கருணாநிதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு இன்னும் ஒருசில நாட்கள் மருத்துவமனை சிகிச்சை அளிக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி ஆகிய இருவருமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது