ஹிஜாப் விவகாரம்: கர்நாடக முதல்வர் எடுத்த அதிரடி நடவடிக்கை

கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக ஹிஜாப் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இந்த நிலையில் அம்மாநிலத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் தற்போது பிப்ரவரி 14ஆம் தேதி முதல் கர்நாடக மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்படும்

முதல் கட்டமாக 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்

கல்லூரிகள் திறப்பு குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
ஹிஜாப் தொடர்பான வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம் பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.