காவிரி விவகாரத்தில் மத்திய அரசு பணியக்கூடாது: மோடிக்கு சித்தராமையா கடிதம்

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு பணியக்கூடாது: மோடிக்கு சித்தராமையா கடிதம்

தமிழகத்தில் காவிரி மேலாண்மை அமைக்க தொடர் போராட்டம் நடந்து வரும் நிலையில் தமிழகத்தின் நிர்ப்பந்தத்தால் மத்திய அரசு பணிந்துவிட கூடாது என கர்நாடக முதல்வர் சித்தராமையா, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்

நதி நீர் பங்கீட்டிற்கு ஒரு குழுவை தான் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது என கர்நாடகா முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். இதனால் காவிரி வாரிய விவகாரத்தில் தமிழகத்திலிருந்து கொடுக்கப்பட்டும் அழுத்தத்திற்கு மத்திய அரசு பணிய வேண்டாம்.

காவிரி நதி நீர் பங்கிட ஒரு குழு அமைத்தால் போதும், அதற்கான மேலாண்மை வாரியத்தை அமைக்க தேவையில்லை. உச்ச நீதிமன்ற உத்தரவை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும் என சித்தராமையா தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால், அதில் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அணைகள் அதன் கட்டுப்பாட்டிற்கு போகும். அப்படி போனால் அணைகளில் உள்ள தண்ணீர் அளவைப் பொருத்து தண்ணீர் திறக்கப்படும் என்பதால் கர்நாடக அரசு உச்ச நீதிமன்றம் ஒரு குழு அமைக்கத் தான் சொல்லியுள்ளது என மத்திய அரசுக்கு முதல்வர் சித்தராமையா சார்பாக கடிதம் எழுதப்பட்டுள்ளது.

Leave a Reply