கேட்காமலேயே காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட்ட கர்நாடகா

கேட்காமலேயே காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட்ட கர்நாடகா

சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டே காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடாத கர்நாடக அரசு தற்போது நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை பெய்து கர்நாடக அணை நிரம்பிய காரணத்தால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட அம்மாநில அரசு முடிவு செய்தது.

கடந்த வாரம் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து 4,000 கன அடி நீர் தமிழகத்திற்காக திறந்து விடப்பட்டதாக கர்நாடகா தெரிவித்தது. இந்த தண்ணீர் 2 நாட்களுக்கு முன்னரே தமிழகம் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று காலை 9 மணியளவில் தமிழக எல்லையில் அமைந்துள்ள பிலிகுண்டுலுவை வந்தடைந்தது. விநாடிக்கு 1,100 கன அடி என்ற அளவில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தற்போது காவிரி நீர், ஒகேனக்கல் வந்து சேர்ந்துள்ளது.

தமிழகத்தில் மழை பொய்த்து வறட்சி நிலவுவதால் இந்த தண்ணீர் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு உபயோகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

 

 

Leave a Reply