ஸ்ரீராமசேனை அமைப்பை தடை செய்ய பரிசீலனை. கர்நாடக முதல்வர் அறிவிப்பு.

srirama senaஸ்ரீராமசேனை என்ற அமைப்புக்கு தடை விதிப்பது குறித்து கர்நாடக அரசு பரிசீலித்து வருவதாக அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா நேற்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

கர்நாடகத்தில் ஸ்ரீராமசேனை என்ற அமைப்பு  சில ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த அமைப்பால் அவ்வப்போது கலவரங்கள், பிரச்சனைகள் மாநிலம் முழுவதும் ஏற்பட்டு வருகிறது. இதனால் சட்டம்–ஒழுங்கு கடுமையான அளவில் பாதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு ஒரு முடிவு எடுப்பது அவசியம் என்பதால் ஸ்ரீராமசேனை அமைப்புக்கு தடை செய்ய கர்நாடக அரசு பரிசீலித்து வருவதாக முதல்வர் சித்தராமையா நேற்று கூறியுள்ளார். மேலும் ஸ்ரீராமசேனை அமைப்பால் சட்டம்–ஒழுங்கு பாதிக்கப்பட்டால், அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும்.

ஏற்கனவே கோவா மாநிலத்தில் ஸ்ரீராமசேனை அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. அதுபோல, கர்நாடகத்திலும் ஸ்ரீராமசேனை அமைப்பை தடை செய்வது குறித்து அரசு பரிசீலிக்கிறது. அதுபற்றி பெங்களூரில் அமைச்சர்களுடன் உரிய ஆலோசனை நடத்தி ஸ்ரீராமசேனை அமைப்பை தடை செய்வது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்” என்றார்.

Leave a Reply