கர்நாடக மாநிலத்தில் மதமாற்ற தடைச் சட்டம் அமல்படுத்த மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதை அடுத்து அம்மாநில எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்
கல்வி, சலுகைகள், இலவச பரிசுகள் என்று ஆசைகாட்டி ஒருவரை மதமாற்றம் செய்வதற்கு தடை விதிப்பதாகவும், மதமாற்றம் மூலம் நடைபெறும் திருமணங்கள் செல்லாது என்றும் இந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும் ஒருவரை கட்டாயப்படுத்தி மதமாற்றத்தில் ஈடுபட்டால் 10 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கவும், 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கவும் இந்த மசோதா வழி செய்கிறது.