சுப்ரீம் கோர்ட்டின் அதிரடி உத்தரவால் தண்ணீரை திறந்துவிட்ட கர்நாடகா.

சுப்ரீம் கோர்ட்டின் அதிரடி உத்தரவால் தண்ணீரை திறந்துவிட்ட கர்நாடகா.

cauveryதமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கொடுக்க முடியாது என்று கர்நாடகம் கூறிய நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் கண்டிப்பு காரணமாக நேற்று தமிழகத்துக்கு 11 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டில் காவிரி தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா, நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், கிராமப் புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல், மூத்த வழக்கறி ஞர் மோகன் கடார்கி ஆகியோர் டெல்லிக்கு சென்று கர்நாடக அரசின் சட்ட ஆலோசகரும், மூத்த வழக்கறி ஞருமான ஃபாலி எஸ். நாரிமனை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.

நீண்ட நேரம் நடைபெற்ற இந்த சந்திப்புக்கு பிறகு வெளியே வந்த சித்தராமையா, “காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசின் உண்மை நிலை குறித்து, எங்களது சட்ட நிபுணர்கள் நீதிமன்றத்தில் திங்கள் கிழமை விரிவாக வாதிடுவார்கள்” என்று கூறினார்.

இந்நிலையில் கர்நாடக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இருந்து தப்பிக்கும் நோக்கில் தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட முன்வந்துள்ளது. இதன் தொடக்கமாக கிருஷ்ணராஜசாகர், ஹேமாவதி, கபினி, ஹாரங்கி ஆகிய அணைகளின் நீர்மட்டத்தை ஆராய்ந்து தமிழகத்துக்கு முதல் கட்டமாக 25 டிஎம்சி நீரை வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply