தமிழ்நாட்டில் முடிவு, கர்நாடகாவில் ஆரம்பம். கம்பாளாவுக்கு ஆதரவாக போராட்டம்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த மாணவர்களின் எழுச்சி போராட்டம் ஒருசிறிய வன்முறையுடன் நேற்று முடிவுக்கு வந்தது. ஜல்லிக்கட்டு சட்டம் இயற்றப்பட்டதால் இந்த போராட்டம் முழுவெற்றி பெற்றது.
இந்நிலையில் தமிழகத்தில் வெற்றி பெற்ற இளைஞர்களின் புரட்சியை தற்போது பலர் பின்பற்ற தொடங்கிவிட்டனர். குறிப்பாக கர்நாடகாவில் பாரம்பரியமாக நடத்திவரும் “கம்பாளா” என்ற எருமை மாட்டு பந்தயம் நடத்த போராட்டம் நடத்த திட்டம் கன்னட இளைஞர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
கர்நாடக ஐகோர்ட் தடை காரணமாக ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக நடைபெறும் கம்பாளா போட்டி கடந்த ஆண்டு நடைபெறவில்லை. இந்த ஆண்டு போராட்டம் நடத்தி, இந்த போட்டியை நடத்த வேண்டும் என்றும் கன்னட இளைஞர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் எழுச்சி பெற்று வருகின்றனர். இது என்றைக்கு போராட்டமாக வெடிக்கும் என்று தெரியவில்லை.