கர்நாடக மாநிலத்தின் முன்னாள் பாரதிய ஜனதா கட்சியின் அமைச்சர் விதவைப்பெண் மிரட்டல் காரணமாக தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
கர்நாடக மாநில பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த எஸ்.ராமதாஸ், கடந்த ஆட்சியில் அமைச்சராக பணியாற்றினார். அப்போது அவருக்கும் ஒரு விதவைப்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும், அதன்பின்னர் இருவரும் சேர்ந்து வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.
பின்னர் சில மாதங்கள் கழித்து அமைச்சர் அந்த பெண்ணை தவிர்க்க முயற்சித்ததால், கட்சி மேலிடத்தில் அந்த பெண் புகார் அளித்தார். இதன் காரணமாக அமைச்சர் பதவியை இழந்தார் ராமதாஸ். இதை தொடர்ந்து கட்சியில் இருந்து அவரை நீக்க பாஜக மேலிடம் முடிவு செய்ததால், மன உளைச்சலுக்கு ஆளான அமைச்சர் இன்று திடீரென தற்கொலை முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.
தற்போது மைசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக கூறப்படுகிறது. அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.