கர்நாடக முதல்வர் மகன் மரணம். அரசியல் தலைவர்கள் இரங்கல்

கர்நாடக முதல்வர் மகன் மரணம். அரசியல் தலைவர்கள் இரங்கல்

karnataka-cmகர்நாடக மாநில முதல்வர் சித்தராமையாவின் மூத்த மகன் ராகேஷ் நேற்று பல்கேரியா நாட்டில் உடல்நலக்கோளாறு காரணமாக மரணம் அடைந்தார். கர்நாடக முதல்வர் மகனின் திடீர் மறைவால் அதிர்ச்சி அடைந்த அரசியல் தலைவர்கள் அவரது குடும்பத்தினர்களுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

திமுக தலைவர் கருணாநிதி தனது இரங்கல் செய்தியில், “உங்களது அன்பு மகன் ராகேசின் அகால மரணம் அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். இந்த துயரமான, ஆழ்ந்த கவலை மிகுந்த இத்தருணத்தில் தங்களுக்கும், தங்களது மனைவி மற்றும் குடும்பத்தினருக்கும் ஆறுதல் சொல்ல போதிய வார்த்தைகள் இல்லை. எனது ஆழ்ந்த இதயத்தில் இருந்து வெளிப்படும் வருத்தத்தை தயவு செய்து ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதேபோல் தேமுதிக தலைவர் விஜயகாந்த் விடுத்த அறிக்கையில், கர்நாடகா முதல்வர் சித்தராமையா மூத்த மகன் ராகேஷ் நேற்று (30.07.2016) இயற்கை எய்தினார் என்ற செய்திகேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். ராகேஷ் அவர்களை இழந்து வாடும், சித்தராமையா அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.

இதேபோல் கர்நாடக மாநில அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், ஆகியோர்களூம் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply