தேடப்படும் நபராக கார்த்திக் சிதம்பரத்தை அறிவித்த அமலாக்கத்துறை

தேடப்படும் நபராக கார்த்திக் சிதம்பரத்தை அறிவித்த அமலாக்கத்துறை

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் மகன் கார்த்திக் சிதம்பரம் அன்னிய செலாவணி மற்றும் பங்குச்சந்தை மோசடி வழக்கு புகாரில் சிக்கியுள்ளார். இதுகுறித்து விளக்கம் கேட்டு அமலாக்கத்துறை நோட்டீஸ் கார்த்திக் சிதம்ரபத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது.

அதுமட்டுமின்றி அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையிலும் ஈடுபட்டனர். இந்த நிலையில், கார்த்தி சிதம்பரம் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விடக்கூடாது என்பதற்காக மத்திய உள்துறை அமைச்சகம் அவரை சமீபத்தில் தேடப்படும் நபராக அறிவித்தது. இதனால்அவர் விமானம் மூலமாகவோ, கடற்பயணம் மூலமாகவோ வெளிநாடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை எதிர்த்து, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள லுக் அவுட் சுற்றறிக்கையை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் கார்த்தி சிதம்பரம் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு வரும் திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது

Leave a Reply