விழுப்புரம் பாராளுமன்றம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தனது புகைப்படத்தை சகுனி படத்தில் அரசியல்வாதியாக நடித்த நடிகர் கார்த்தியின் புகைப்படத்துடன் சேர்த்து வைத்து போஸ்டர் அடித்து பிரச்சாரம் செய்து வருகிறார். இது கார்த்தி ரசிகர்களை அதிர்ச்சியுற செய்துள்ளது.
இந்த போஸ்டரினால் நடிகர் கார்த்தி அதிமுகவில் சேர்ந்துவிட்டாரா? என்ற தகவல் நகரம் முழுவதும் பரவி வருகிறது. இந்த போஸ்டர் குறித்த தகவல் சென்னையில் இருக்கும் நடிகர் கார்த்திக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் கார்த்தியின் தரப்பில் இருந்து எவ்வித எதிர்ப்பும் கிளம்பவில்லை.
கார்த்தியின் தந்தை சிவகுமாரும் இதுகுறித்து எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. சிவகுமார் ஏற்கனவே ஜெயலலிதாவின் அபிமானி என்பதால், கார்த்தியின் போஸ்டர் குறித்து அவர் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் வெளிப்ப்டையாக அதிமுகவுக்கு ஆதரவு கொடுப்பது பற்றியோ அல்லது அதிமுகவில் சேருவது குறித்தோ சிவகுமார் மற்றும் கார்த்தி எதுவும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.