கார்த்திகை மாதத்தின் இரு முக்கிய விரதங்கள்

imagesதமிழ்க்கடவுள்’ முருகப்பெருமானின் பெருமையை பறைசாற்றும் உன்னத நிகழ்வான கந்தசஷ்டி வருகிற 12-ந் தேதி தொடங்குகிறது. திருச்செந்தூரில் கந்தசஷ்டி முதல் ஆறுநாட்கள் சஷ்டி விரதம், சூரசம்ஹாரம், ஏழாம் நாளில் முருகன், தெய்வானை திருக்கல்யாணம், அடுத்த 5 நாட்கள் சுவாமி திருக்கல்யாண கோலத்தில் ஊஞ்சல் சேவை என 12 நாட்கள் கொண்டாடப்படும். 6-ம் நாள் (17-ந் தேதி) முருகப்பெருமான் கடற்கரையில் எழுந்தருளி சூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்வு நடக்கிறது. இந்த நாளில் விரதம் மேற்கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தால், வாழ்வில் எல்லா நலங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். சென்னையில் வடபழனி, கந்தக்கோட்டம் முருகன் கோவில்களில் கந்தசஷ்டியையொட்டி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 

திருவண்ணாமலையிலே அய்யனின் அண்ணாமலை ஜோதி, காந்த மலையிலே கலியுகதெய்வம் அய்யப்பனின் மகர ஜோதி என்று கூறுவார்கள். கார்த்திகை மாதம் அய்யப்ப பக்தர்களுக்காக சபரிமலை நடை திறக்கப்படும். கார்த்திகை பிறந்தால் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து சபரிமலை யாத்திரை செல்வார்கள். சபரிமலை அய்யப்பனுக்கு நேர்ந்துகொண்டு மண்டல கால பூஜைக்காக மாலை போடுவதும், 41 நாட்கள் விரதம் இருந்தும் வழிபடுவார்கள்.

கார்த்திகை முதல் நாளன்றுதான் சபரிமலை சன்னிதானத்தின் தங்கக்கதவுகளை மேல்சாந்தி திறந்து தீபம் ஏற்றி வணங்குவார். அந்த வகையில் வருகிற 17-ந் தேதி கார்த்திகை 1-ந் தேதி அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் மேற்கொள்ள இருக்கிறார்கள். இதற்காக சென்னையில் உள்ள ராஜா அண்ணாமலைபுரம், மகாலிங்கபுரத்தில் உள்ள அய்யப்பன் கோவில்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

Leave a Reply