மத்திய ரயில்வே அமைச்சர் மகன் மீது திடுக்கிடும் புகார் கூறிய பிரபல நடிகை. பெரும் பரபரப்பு.

gowda sonஎன்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்துவிட்டு தற்போது வேறு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்துள்ளார் ரயில்வே அமைசரின் மகன் கார்த்திக் கவுடா  என பிரபல நடிகை மைத்ரேயி திடுக்கிடும் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். இதனால் டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்தா கவுடா அவர்களின் மகன் கார்த்திக் கவுடாவுக்கும் குடகு மாவட்டம், குஷால் நகரை சேர்ந்த நானய்யா என்பவரின் மகள் ஸ்வாதி என்ற பெண்ணுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது.

இந்நிலையில் பிரபல நடிகை மைத்ரேயி நேற்று காவல்நிலையத்தில் ஒரு திடுக்கிடும் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் மத்திய ரயில்வே அமைச்சரின் மகன் கார்த்திக் தன்னை திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி கொடுத்ததாகவும், ஆனால் என்னை ஏமாற்றிவிட்டு வேறொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்துள்ளார் என்றும், எனவே அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் கூறியதோடு இருவரும் இணைந்திருக்கும் புகைப்பட ஆதாரத்தையும் அவர் காவல்துறையினர்களிடம் அளித்துள்ளார்.  திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த சில மணி நேரத்திலேயே, கார்த்திக் கவுடா மீது பிரபல நடிகை ஒருவர்  குற்றஞ்சாட்டியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து கார்த்திக் கவுடா வெளியிட்ட அறிக்கை ஒன்றில், அந்த புகைப்படத்தில் இருப்பது நான் இல்லை. அந்த நடிகையோடு நான் இருப்பது போன்று கிராபிக்ஸ் செய்யப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply