கருணாநிதி-அழகிரி திடீர் சந்திப்பு. ஸ்டாலின் நிலைமை என்ன?

கருணாநிதி-அழகிரி திடீர் சந்திப்பு. ஸ்டாலின் நிலைமை என்ன?
karunanidhi and alagiri sudden meeting
கட்சி விரோத போக்கில் ஈடுபட்டதாக கடந்த 2014ஆம் ஆண்டு திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி அதன்பின்னர் திமுகவையும், ஸ்டாலினையும் கடுமையாக விமர்சனம் செய்து வந்த நிலையில் இன்று திடீரென கருணாநிதியை மு.க.அழகிரி சந்தித்துள்ளார். இது ஒரு தந்தை-மகன் உறவு குறித்த தனிப்பட்ட சந்திப்பு என்று கூறப்பட்டாலும் தேர்தல் நேரத்தில் நடந்துள்ள இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

விஜயகாந்த் என்ற பழம் நழுவி பாலில் விழும் என்ற நம்பிக்கையுடன் இருந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு, பழம் பாலில் விழாமல் தரையில் விழுந்ததால் பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளானார். காங்கிரஸை மட்டும் கூட்டணியில் வைத்துக்கொண்டு கண்டிப்பாக ஆட்சியை பிடிக்க முடியாது என்பதை புரிந்து கொண்ட கருணாநிதி அட்லீஸ்ட் எதிர்க்கட்சி அந்தஸ்தையாவது பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அதிருப்தியாளர்களை அரவணைத்து வருவதாகவும் அதன் முதல்கட்டம்தான் மு.க.அழகிரியுடனான இந்த சந்திப்பு என்றும் திமுக வட்டாரங்களில் கூறப்படுகிறது.

ஆனால் இந்த சந்திப்பை மு.க.ஸ்டாலின் ரசிக்கவில்லை என்றே கருதப்படுகிறது. இந்த சந்திப்பு குறித்து அவர் கூறியபோது, ‘இது முற்றிலும் தனிப்பட்ட முறையிலான சந்திப்பு. அரசியல் பற்றி எதுவும் விவாதிக்கப்படவில்லை. நீங்களாகவே ( பத்திரிகையாளர்கள்) ஏதாவது கண், காது, மூக்கு வைத்து எழுதிவிடாதீர்கள்” என்று கூறினார்.

Leave a Reply