தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒருசில கூட்டுறவு வங்கிகள் கடந்த திமுக ஆட்சியில் தள்ளுபடி செய்யப்பட்ட கடனை மீண்டும் கட்டுமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இதுகுறித்து திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை அளித்துள்ளார். அவர் இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நான் 2006-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும், விவசாயிகள் பெற்ற கூட்டுறவு கடன்கள் தள்ளுபடி செய்தேன். ஆனால் தற்போது ஒன்பது ஆண்டுகள் கழித்து, அசல் மற்றும் வட்டியுடன் கடனை திருப்பிச் செலுத்துமாறு தஞ்சை மாவட்டத்தில் உள்ள சில கூட்டுறவுக் கடன் சங்கங்கள் விவசாயிகளுக்கு தற்போது நோட்டீஸ் அனுப்பி வருவதாகச் செய்திகள் வந்துள்ளது.
எனவே தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, தள்ளுபடி செய்யப்பட்ட தொகையை மீண்டும் வசூலிக்க எடுக்கின்ற முயற்சி தவறு என்பதற்கான அறிவுரையை கூட்டுறவு கடன் வங்கிகளுக்கு அனுப்ப வேண்டும்’ என்று தனது அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.