ஜெயலலிதா மறைவு எதிரொலி. முக்கிய ஆலோசனையில் திமுக தலைவர்கள்

ஜெயலலிதா மறைவு எதிரொலி. முக்கிய ஆலோசனையில் திமுக தலைவர்கள்

karunanidhiமுதல்வராக இருந்த செல்வி ஜெயலலிதா கடந்த திங்கள் அன்று இரவு 11.30 மணிக்கு காலமானார். அவருக்கு திமுக சார்பில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் கடந்த 1ஆம் தேதியில் இருந்து சென்னை காவேரி மருத்துவமனையில் உடல்நல பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த கருணாநிதி இன்று டிஸ்சார்ஜ் ஆகி கோபாலபுரம் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் தனது வீட்டி முக்கிய திமுக நிர்வாகிகளுடன் கருணாநிதி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த ஆலோசனையில் மு.க. ஸ்டாலின், ஏ.வ.வேலு, ஆ.ராசா உள்பட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் சற்று முன்னர் திமுக தலைமை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ‘கருணாநிதியை மேலும் சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். நோய்த்தொற்று ஏற்படாமல், கருணாநிதி மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளனர். இதனால், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ள கருணாநிதியை பார்க்க வருவதை தவிர்க்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply