ஸ்டாலின் என்னுடைய அரசியல் வாரிசு. ஆனால் தலைமை பதவியை விட்டு கொடுக்க மாட்டேன். கருணாநிதி.

ஸ்டாலின் என்னுடைய அரசியல் வாரிசு. ஆனால் தலைமை பதவியை விட்டு கொடுக்க மாட்டேன். கருணாநிதி.

stalinமு.க.ஸ்டாலின் தான் என்னுடைய அரசியல் வாரிசு என திமுக தலைவர் கருணாநிதி பகிரங்கமாக அறிவித்துள்ளார். நீண்டகாலமாக கருணாநிதியின் அரசியல் வாரிசு யார்? என்ற கேள்வி எழுந்து கொண்டிருந்த நிலையில் இந்த கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கருணாநிதி தற்போது தனது அரசியல் வாரிசை அறிவித்துள்ளார். ஆனால் இந்த அறிவிப்பை அழகிரி, கனிமொழி ஆகியோர் ஏற்றுக்கொள்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்,

இதுகுறித்து கருணாநிதி மேலும் கூறியதாவது:

ஸ்டாலின் மிக இளைஞராக இருந்த காலத்திலேயே கோபாலபுரம் இளைஞர் மன்றத்தை உருவாக்கி, ஓடியாடி பாடுபட்டு, பின்னர் மிசா காலத்தில் சிறைக்குச் சென்ற நாளில் இருந்து, பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆட்பட்டு, அவரே தானாக உழைத்து, உழைத்து, தி.மு.க.வின் வருங்காலத் தலைவர் என்ற நிலைக்கு தன்னைத்தானே படிப்படியாக உயர்த்திக்கொண்டவர். அந்த வகையில், அவர்தான் இன்றைக்கு என்னுடைய அரசியல் வாரிசாகவும் திகழ்கிறார்.

ஸ்டாலினை அரசியல் வாரிசாக அறிவித்தாலும் அவருக்கு தலைமை பதவியை விட்டுக்கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று கருணாநிதி கூறியுள்ளார். இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “ஓய்வுக்கே ஓய்வு கொடுத்து, ஓயாமல் உழைப்பவன் இந்தக் கருணாநிதி. அதனால் தலைமைப் பதவியை ஸ்டாலினுக்கு விட்டுத்தரும் யோசனையே இல்லை எனக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பாக இருந்து தி.மு.க. பணிகள் பலவற்றை தம்பி ஸ்டாலின் தான் ஆற்றி வருகிறார் என்பது தான் உண்மை.

Leave a Reply