காலையில் டிஸ்சார்ஜ் ஆன கருணாநிதி மாலையில் அஞ்சலி செலுத்துகிறாரா?
திமுக தலைவர் கருணாநிதி இன்று காலை காவேரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி கோபாலபுரம் வீட்டிற்கு வந்தார். இந்நிலையில் இன்று மாலை அவர் ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தவுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காக இன்று காலை அவர் முக்கிய நிர்வாகிகளுடன் மதியம் ஆலோசனை செய்ததாகவும் இதன்படி இன்று மாலை அவர் முன்னாள் முதல்வருக்கு அஞ்சலி செலுத்தவுள்ளதாகவும் திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
உயிருடன் இருந்தபோது கடந்த பல வருடங்களாக ஜெயலலிதாவை நேரில் சந்திக்காத கருணாநிதி, அவர் இறந்த பின்னர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.