கருணாநிதி – ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் திடீர் சந்திப்பு. மீண்டும் கூட்டணியா?

evks ilangovanதமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்று காலை திடீரென திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருணாநிதியின் வீட்டில் நடந்த இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் வரை நடந்தது. இந்த சந்திப்புக்கு பின்னர் வெளியே வந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், செய்தியாளர்களிடம் இதுகுறித்து கூறும்போது, ”திமுகவுடன் அரசியலில் வேறுபாடுகள் இருந்தாலும் அதற்கு அப்பாற்பட்டு தமிழகம் என்று சொன்னால் மூத்த தமிழ் குடிமகன் கருணாநிதி தான். அதனால் அவரை சந்தித்து வாழ்த்து பெறுவதற்காக வந்தேன். நான் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து பேசினேன்.

நான் இங்கு அரசியல் பேச வரவில்லை. சுயமரியாதை குடும்பத்தின் மூத்த தலைவர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற வந்தேன். அவரும் என்னை வாழ்த்தினார். இதேபோல், கம்யூனிஸ்டு மூத்த தலைவர்கள் நல்லக்கண்ணு, சங்கரய்யாவையும் நான் சந்தித்து பேச இருக்கிறேன்.

கூட்டணி பற்றியெல்லாம் தற்போது நான் சொல்ல முடியாது. சோனியா காந்தியும், கருணாநிதியும் தான் பேச வேண்டும். எங்கள் குடும்பத்தின் மூத்த தலைவரை சந்தித்த இந்த நல்ல நேரத்தில், சில சில்லறைகள் பற்றி பேச விரும்பவில்லை. அவரை பற்றி கடந்த 4 நாட்களாக நிறைய பேசி விட்டேன். இளங்கோவன் ஜி.கே.வாசனைத்தான் சில்லறை என்று கூறியதாக பத்திரிகையாளர்கள் வட்டத்தில் பரபரப்புடன்

வருகின்ற 12 ஆம் தேதி முதல் நான் மாவட்டம் முழுவதும் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேச இருக்கிறேன். முதல் மாவட்டமாக திருநெல்வேலிக்கு செல்கிறேன். அதனை தொடர்ந்து கன்னியாகுமரிக்கு செல்கிறேன். 14 ஆம் தேதி நேரு பிறந்தநாளை காமராஜர் அரங்கத்தில் கொண்டாட இருக்கிறோம். இதில் ப.சிதம்பரம் கலந்து கொள்கிறார். மற்றபடி எதையும் நான் கூற விரும்பவில்லை” என்றார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதியை, இளங்கோவன் சந்தித்து பேசி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply