தமிழக அரசின் உதவியை மறுத்த கருணாநிதி
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டு ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு பாதிக்கப்பட்டவர்களுக்கு வெள்ள நிவாரணம் தருவதற்காக கணக்கெடுக்கும் பணியை நடத்தி வருகிறது. இதற்காக அரசு அலுவலகர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று வெள்ள பாதிப்பு குறித்த தகவல்களை சேகரித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை கோபாலபுரத்தில் அரசு அதிகாரிகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டபோது, அங்குள்ள திமு.க. தலைவர் கருணாநிதியின் வீட்டுக்கும் சென்றிருந்தனர்.
ஆனால் கருணாநிதி வீட்டில் உள்ளவர்கள், உள்ளே கேட்டு விட்டு சொல்கிறோம் என்று கூறி கருணாநிதியிடம் விவரத்தை சொல்லியதாகவும், அதன் பிறகு கணக்கெடுக்க வந்த ஊழியர்களிடம், இந்த வீட்டுக்கு வெள்ள நிவாரணம் வேண்டாம் என்று சொல்லி அனுப்பி விட்டதாகவும் கூறப்படுகிறது.