நீதி நிச்சயம் வெல்லும். எந்த குறுக்கு வழியாலும் தடுக்க முடியாது. கருணாநிதி

நீதி நிச்சயம் வெல்லும். எந்த குறுக்கு வழியாலும் தடுக்க முடியாது. கருணாநிதி
Jayalalithaa-Karunanidhi
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணை முடிவடைந்து தீர்ப்பு நெருங்கி வரும் நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பின் மூலம் நீதி வெல்லும் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “குற்றவாளிகள் மீது கூறப்பட்ட புகார் உண்மையில்லை என்பதை உறுதி செய்ய எந்த ஆதாரமும் குற்றம் சாட்டப்பட்டவர்களால் காட்டப்படவில்லை என்றும், இதை பொய் வழக்காக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், ஒரு ரூபாய் ஊதியம் பெற்ற ஜெயலலிதா 66 கோடி சொத்து சேர்த்ததை லஞ்ச ஒழிப்பு கண்காணிபு துறை உறுதி செய்துள்ளது என்றும், தனி நீதிபதி கொடுத்த தீர்ப்பையே உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிபதி விசாரணைகளுக்கு இடையே தெரிவித்துள்ளதால் இந்த வழக்கின் மூலம் நிச்சயம் நீதி வெல்லும்’ என்று தனது அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

நீதிபதி குமாரசாமி இன்னும் சில நாட்களில் தீர்ப்பை தரவுள்ளார். அதுவரை பொறுத்திருப்போம். நீதி என்றும், நிச்சயம் வெல்லும், எந்த குறுக்கு வழிகளாலும் அதை தடுக்க முடியாது என்றும் அவர் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply