அழகிரியை அலட்சியப்படுத்துங்கள். தொண்டர்களுக்கு கருணாநிதி வேண்டுகோள்

அழகிரியை அலட்சியப்படுத்துங்கள். தொண்டர்களுக்கு கருணாநிதி வேண்டுகோள்
karunanidhi
வரும் மே மாதம் நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி உறுதியானது குறித்து கருத்து கூறிய மு.க.அழகிரி இரண்டு கட்சிகளுமே கொள்கை இல்லாதவை என்று கூறினார். இதுகுறித்து திமுக தலைவர் கருணாநிதி, “மு.க.அழகிரி செய்து வரும் துரோகத்திற்கு என் பெயரை பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது என்றும், அழகிரியையும், அவரது பேச்சுக்களையும் தி.மு.க. தொண்டர்கள் அலட்சியப்படுத்த வேண்டும் என்றும்ம் கருணாநிதி இன்று விடுத்துள்ள அறிக்கை ஒன்றின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் நிலையில் முதன் கூட்டணியாக திமுக-காங்கிரஸ் கூட்டணி உறுதியாகியுள்ளது. இந்த கூட்டணியில் தேமுதிகவும் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன் தினம் சென்னை வந்த குலாம் நபி ஆசாத், திமுக தலைவர் கருணாநிதியை பார்த்து உறுதிப்படுத்தியது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, திமுக-காங்கிரஸ் கூட்டணி கொள்கை இல்லாத கூட்டணி என்றும் இந்த கூட்டணியால் அ.தி.மு.க.வை வெல்ல முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில், கருணாநிதி, அன்பழகன், தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின், முதன்மை செயலாளர் துரைமுருகன், கனிமொழி ஆகியோர் அவசர ஆலோசனை கூட்டம் நடத்திய பின்னர் அழகிரியின் கருத்தை அலட்சியப்படுத்துமாறு தொண்டர்களுக்கு கருணாநிதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையின் முழுவிபரம் இதோ:

statement

Leave a Reply