காஷ்மீர் பெருவெள்ளத்தில் சிக்கி முதல்வர் உமர் அப்துல்லா தவிப்பு. பெரும் பரபரப்பு.

omarகாஷ்மீர் மாநிலத்தில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அங்குள்ள லட்சக்கணக்கான பொதுமக்கள் தவித்து வருகின்றனர். கனமழை காரணமாக மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம், குடிநீர், உணவு போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. இது பொதுமக்களுக்கு மட்டுமின்றி ஜம்மு காஷ்மீர் முதல்வருக்கும் இதே நிலைதான் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சர் உமர் அப்துல்லாவின் வீட்டிலும் மின்சாரம் தடைபட்டுள்ளதால் அவர் அருகில் உள்ள இடத்தில் தற்கால அலுவலக அறை அமைத்து அதில் இருந்து மீட்புப்பணிக்கான உத்தரவை பிறப்பித்து வருகிறார். மேலும் முதல்வரின் செல்போனும் துண்டிக்கப்பட்டுள்ளதால் அவரால் மற்ற மந்திரிகளுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதுகுறித்து முதலமைச்சர் உமர் அப்துல்லா கூறியதாவது, “என்னுடைய தலைநகர் ஸ்ரீநகர் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட முதல் 36 மணி நேரத்தில், என்னிடம் அரசு இல்லை. எனது அரசு முழுவதும் மூழ்கிப்போயிருந்தது. அதன்பிறகு வெறும் 6 அதிகாரிகளை கொண்டு அரசு நிர்வாகத்தை இயக்கினேன் என்று தெரிவித்தார்.

காஷ்மீரில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் அந்த மாநிலத்தின் மந்திரிகள் எங்கு இருக்கின்றார்கள், என்ன நிலையில் இருக்கின்றார்கள் தெரியவில்லை. தகவல் தொடர்புகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், ராணுவத்தினர்களும் மீட்புப்பணிகளில் போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply