காஷ்மீரில் 3G, 4G சேவைகள் திடீர் நிறுத்தம்: தீவிரவாதிகள் அட்டகாசம் எதிரொலி

காஷ்மீரில் 3G, 4G சேவைகள் திடீர் நிறுத்தம்: தீவிரவாதிகள் அட்டகாசம் எதிரொலி

காஷ்மீரில் அவ்வப்போது தீவிரவாதிகளின் அட்டகாசம் பெருகி வரும் நிலையில், அவ்ர்கள் ஒருவருக்கொருவர் இணையம் மூலம் தொடர்பு கொள்ளாமல் இருக்க அம்மாநிலத்தில்  3G, 4G சேவைகளை நிறுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே அம்மாநில மக்கள் இனி 2G சேவையை மட்டுமே பெற முடியும்

காஷ்மீரில் உள்ள  பான்டா சதுக்கத்தின் அரசுப் பள்ளியில் இரு தீவிரவாதிகள் பதுங்கி இருந்து அச்சுறுத்தி வருகின்றனர். தற்போது ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ள அந்த பள்ளியை வீரர்கள் சுற்றி வைத்துள்ளனர். இச்சூழலில் பாதுகாப்பு காரணங்களுக்காக காஷ்மீர் எல்லைப்பகுதிகளில் இன்டர்நெட் சேவையை குறைந்த வேகத்தில் அளிக்க காவல்துறை கூறியுள்ளது.

128 Kbps என்ற வேகத்திற்கு உட்பட்டு 2ஜி இன்டர்நெட் சேவையை அளித்தால் போதும் என்றும் 3ஜி, 4ஜி சேவைகளை நிறுத்திவைக்க வேண்டும் என்றும் காவல்துறை உத்தரவிட்டுள்ளது. ராம் முன்ஷி பாக் மற்றும் சம்போரா ஆகிய இடங்களில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு இடையிலான தகவல் தொடர்பு கட்டுப்படுத்தபடும் என தெரிகிறது

Leave a Reply