கஸ்தூரி மேத்தி ஆலு பிரை

7beeb5d1-7481-4a51-9814-2f2414776652_S_secvpf

தேவையான பொருட்கள் :

பெரிய உருளைக்கிழங்கு – 3
கஸ்தூரி மேத்தி – அரை கப்
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
உப்பு – சுவைக்கு
எண்ணெய் – 1 ஸ்பூன்

செய்முறை :

* உருளைக்கிழங்கை சமமான அளவில் வெட்டிக்கொள்ளவும்

* கஸ்தூரி மேத்தியை தண்ணீரில் 10 நிமிடம் ஊறவைத்த பின் தண்ணீரை நன்றாக வடித்து விட்டு கஸ்தூரி மேத்தியை தனியாக வைக்கவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உருளைக்கிழங்கை போட்டு நன்றாக வதக்கவும்.

* உருளைக்கிழங்கு கலர் மாற ஆரம்பித்தவுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு போட்டு நன்றாக கிளறவும்.

* உருளைக்கிழங்கு நன்றாக வெந்ததும் கஸ்தூரி மேத்தியை போட்டு அடுப்பை மிதமான தீயில்வைத்து 4 முதல் 5 நிமிடம் கிளறி விட்டு இறக்கவும்.

*  சுவையான கஸ்தூரி மேத்தி ஆலு பிரை ரெடி.

* உருளைக்கிழங்கை வேக வைத்தும் செய்யலாம்.

Leave a Reply