இரண்டாவது முறையாக கர்ப்பமாகியிருக்கும் இங்கிலாந்து இளவரசி கேத் மிடில்டன் அவர்களுக்கு இன்று குழந்தை பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பிரிட்டன் மட்டுமின்றி உலகம் முழுவதும் அவருக்கு என்ன குழந்தை பிறக்கும் என்ற சூதாட்டம் கன ஜோராக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
கேத் மிடில்டனுக்கு குட்டி இளவரசி அதாவது பெண் குழந்தைதான் பிறக்கும் என்றும் அந்த குழந்தைக்கு ஆலிஷ் என பெயரிடுவார்கள் என்றும் பலர் கோடிக்கணக்கில் சூதாட்டத்தில் பணம் கட்டியுள்ளனர். அதேபோன்று அவருக்கு ஆண் குழந்தைதான் பிறக்கும் என்றும் ஒருசில பந்தயம் கட்டியுள்ளனர்.
கேத் மிடில்டனுக்கு முதல் குழந்தையான ஜார்ஜ் பிறக்கும்போதும் இதேபோன்று கோடிக்கணக்கில் சூதாட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. கேத் மிடில்டனுக்கு பிறக்கவுள்ள புதிய குழந்தையை வரவேற்க இப்பொழுதே பிரிட்டன் மக்கள் தயாராகி வருகின்றனர்.