குட்டி இளவரசரின் மடியில் குட்டி இளவரசி.
[carousel ids=”65422,65423,65424,65425,65426″]இங்கிலாந்து இளவரசர் வில்லியஸ் மற்றும் கேத் மிடில்டன் ஆகியோர்கள் மூத்த மகன் ஜார்ஜ் தனது தங்கை சார்லட்டை மடியில் வைத்து முத்தம் கொடுத்த கொஞ்சிய போது எடுத்த புகைப்படத்தை இங்கிலாந்து அரச குடும்பம் நேற்று வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் மிகவும் பரபரப்பாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டன் அவர்களுக்கு கடந்த மே மாதம் 2ம் தேதி அழகிய பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு சார்லட் எலிசபெத் டயானா என்று பெயர் அதிகாரபூர்வமாக வைக்கப்பட்டதாக இங்கிலாந்து அரச குடும்பத்தினர் தெரிவித்தனர். இந்நிலையில் குட்டி இளவரசியும், அவரின் அண்ணன் இளவரசர் ஜார்ஜும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் நேற்று வெளியாகியுள்ளது.
மேலும் கடந்த மாதம் ஜார்ஜ் தனது தங்கையுடன் சிரித்தபடி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. இளவரசி சார்லட் பிறந்ததையொட்டி வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் இளவரசர் வில்லியம் மற்றும் கேட் தங்களின் நன்றியை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.