கத்தி பிரச்சனையை தீர்க்க உதவிய அம்மாவுக்கு நன்றி. விஜய் அறிக்கை.

vijay kaththi statementவிஜய்யின் கத்தி திரைப்படம் அனைத்து பிரச்சனைகளையும் முடிந்து சுமூகமாக வெளிவருகிறது என அதிகாரபூர்வமாக செய்திகள் வெளிவந்துள்ளது.

தமிழ் அமைப்பாளர்களின் வேண்டுகோளை ஏற்று, லைகா நிறுவனம் தன்னுடைய பெயரை கத்தி விளம்பரத்தில் இருந்து நீக்க ஒப்புக்கொண்டதாகவும், இதனால் தமிழ் அமைப்புகள் தங்கள் எதிர்ப்பை கைவிடுவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

எனவே திட்டமிட்டபடி நாளை தீபாவளி தினத்தில் ரிலீஸ் ஆகிறது. இன்னும் சில நிமிடங்களில் கத்தி படத்திற்கு ஆன்லைன் மூலம் ரிசர்வேஷன் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

கத்தி படத்தின் பிரச்சனை சுமூகமாக தீர்ந்ததால் இதுகுறித்து நன்றி தெரிவித்து விஜய் அறிக்கை ஒன்றை சற்று முன்னர் வெளியிட்டுள்ளார். கத்தி படத்தின் பிரச்சனையை சுமூகமாக தீர்க்க உதவிய ஜெயலலிதாவுக்கும், தமிழக காவல்துறையினர்களுக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கு விஜய் நன்றி தெரிவித்து அறிக்கை விட்டுள்ளார்.

Leave a Reply