கத்தி ஆடியோ விழாவை லண்டனில் இருந்து சென்னைக்கு மாற்றியது ஏன்?

kaththiஇலங்கை அதிபர் ராஜபக்சேவின் நண்பர் என்று கூறப்படும் சுபாஷ்கரன் அடுத்த வாரம் சென்னைக்கு வந்து பத்திரிகையாளர்களை சந்திக்கும் திட்டத்தை வைத்துள்ளார். கத்தி படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சிக்கு முன்பே பத்திரிகையாளர்களை சந்தித்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் குறித்து விளக்கம் அளிக்க முடிவு செய்துள்ளாராம்.

முதலில் இந்த விழாவை லண்டனில் மிக பிரமாதமாக நடத்த முடிவு செய்திருந்த சுபாஷ்கரன், லண்டனில் தமிழர்களிடையே கிளம்பிய கடும் எதிர்ப்பு காரணமாக வேறு வழியின்றி சென்னைக்கு மாற்றிவிட்டார். சீமான், நெடுமாறன் போன்றவர்கள் கொடுத்த தைரியம், விஜய் ரசிகர்களின் ஆதரவு ஆகியவைகள் சாதகமாக இருப்பதால் சென்னையில் நடக்கவுள்ள ஆடியோ விழாவுக்கு எவ்வித பிரச்சனையும் வராது என்று சுபாஷ்கரன் நினைக்கின்றாராம். மேலும் இந்த விழாவுக்கு சீமானையும் அழைக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் உள்ள லண்டனில் கத்தி படத்திற்கு எதிராக கிளம்பிய எதிர்ப்பை சமாளிக்க முடியாத சுபாஷ்கரன், ஆறு கோடி தமிழர்களை எப்படி சமாளித்துவிடுவார் என்று பார்த்துவிடலாம் என மாணவர் அமைப்புகளும், தமிழ் அமைப்புகளும் வரிந்து கட்டிக்கொண்டு கத்திக்கு எதிரான வேலைகளை முடுக்கிவிட்டுள்ளனர். கத்தி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின் போது பெரும் பிரச்சனை ஏற்படலாம் என கூறப்படுகிறது.

Leave a Reply