திடீர் திருப்பம். தமிழகத்தில் கத்தி ரிலீஸ் இல்லை.

kaththiதலைப்பை பார்த்து விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடையவேண்டாம். விஜய் , சமந்தா நடித்த ‘கத்தி’ திரைப்படம் பல வெளிநாடுகளில் IMAX என்ற புதிய தொழில்நுட்பத்தில் வெளியாக இருக்கின்றது. ஆனால் சென்னை உள்பட தமிழகத்தின் எந்த தியேட்டரிலும் இந்த வசதி இல்லாததால் IMAX தொழில்நுட்பத்தில் கத்தி ரிலீஸாகவில்லை என்பதுதான் செய்தி. இதுகுறித்து விரிவாக பார்ப்போம்

பெரும்பாலான ஹாலிவுட் திரைப்படங்கள் தற்போது IMAX என்ற புதிய தொழில்நுட்பத்தில்தான் வெளிவருகிறது. டால்பி, DTS போல மிகவும் தெளிவாகவும் ஹை ரெசலூசனிலும் திரைப்படத்தை இந்த தொழில்நுட்பம் மூலம் ரசிக்க முடியும். இந்தியாவில் இந்த தொழில்நுட்ப வசதி கொண்ட தியேட்டர் ஒருசில இடங்களில் மட்டுமே உள்ளது. சென்னையில் இந்த வசதியுள்ள தியேட்டர் ஒன்றுகூட இல்லை என்பதுதான் சோகம்.

இந்நிலையில் இளையதளபதி விஜய், சமந்தா நடிப்பில் தீபாவளி அன்று திரைக்கும் வரும் ‘கத்தி’ திரைப்படம் ஒருசில வெளிநாடுகளில் மட்டும்  IMAX  தொழில்நுட்ப வசதி உள்ள திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய படத்தயாரிப்பு நிறுவனமான லைகா பெரும் முயற்சி செய்து வருகிறது. IMAX தொழில்நுட்பத்தில் வெளியாகும் முதல் தமிழ்ப்படம் ‘கத்தி’ தான் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்கட்டமாக ஹாலந்து நாட்டில் உள்ள IMAX வசதியுள்ள தியேட்டர்கள் கத்தி படத்தை புக் செய்துள்ளன. ஹாலந்தில் உள்ள விஜய் ரசிகர்கள் இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் கத்தியை பார்த்து ரசிக்க முடியும். இன்னும் அமெரிக்கா, கனடா, பிரிட்டன் போன்ற நாடுகளில் உள்ள IMAX வசதியுள்ள தியேட்டர் உரிமையாளர்களிடம் லைகா நிறுவனம்பேசி வருவதாகவும், பல வெளிநாட்டு தியேட்டர்களில் இந்த தொழில்நுட்பத்தில் கத்தி வெளியாகும் என்று கூறப்படுகிறது.

ஆனால் சென்னை மற்றும் இந்தியாவில் உள்ள விஜய்ரசிகளுக்கு இந்த கொடுப்பினை இல்லை என்பது ஒரு சோகம்தான். விரைவில் சென்னையிலும் IMAX தொழில்நுட்பத்தை அறிமுகபடுத்த வேண்டும் என்று விஜய் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply