துப்பாக்கியை அடுத்து இந்திக்கு போகிறது கத்தி.

thuppakkiஇளையதளபதி விஜய், காஜல் அகர்வால் நடித்த துப்பாக்கி திரைப்படம் தமிழில் மாபெரும் வெற்றி பெற்று ரூ.100 கோடிக்கு மேல் வசூலானதை போல, அதன் இந்தி ரீமேக்கான ‘தி ஹாலிடே’ திரைப்படமும் ரூ.100 கோடி வசூலை தாண்டிவிட்டது. இதனால் விஜய் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் ‘கத்தி’ திரைப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை வாங்குவதற்கு பாலிவுட்டில் பலத்த போட்டி கிளம்பியுள்ளது. ‘தி ஹாலிடே’ திரைப்படத்தில் நடித்த அக்சயகுமார், இந்த ரீமேக் உரிமையை பெற விரும்புவதாக தகவல்கள் கூறுகின்றது.

துப்பாக்கி படத்தை அடுத்து விஜய், சமந்தா நடித்து வரும் கத்தி திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். துப்பாக்கியின் மாபெரும் வெற்றியால் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. எனவே இந்த படத்தின் இந்தி ரீமேக் உரிமையை பெற்று, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மீண்டும் நடிக்க அக்சயகுமார் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். இந்த படத்தின் இந்தி ரீமேக் உரிமை மட்டும் சுமார் ரூ.20 கோடிக்கு வியாபாரம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கத்தி படத்தின் சாட்டிலைட் உரிமையை பெற முன்னணி சாட்டிலைட் டிவிக்கள் போட்டி போடுகின்றன.

Leave a Reply