விஜய்யின் ‘கத்தி’ பாடல் வெளியானது. ரசிகர்களின் கருத்து என்ன?

kaththi songsவிஜய், சமந்தா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய கத்தி படத்தின் பாடல் இன்று அதிகாலை இணையத்தில் அதிகாரபூர்வமாக வெளியானது. இன்று அதிகாலையில் இருந்தே இணையத்தில் படுவேகமாக விஜய் ரசிகர்களால் டவுன்லொடு செய்யப்பட்டு வருகிறது. விஜய், அனிருத், ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர்கள் முதன்முதலாக கூட்டணி சேர்ந்திருப்பதால் ‘கத்தி’ படத்தின் பாடல்களுக்க் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது.

கத்தி படத்தில் மொத்தம் ஏழு பாடல்கள் இருக்கின்றது.

1. முதல் பாடம் “பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா”: என்று ஆரம்பிக்கும் அதிரடி பாடல். இந்த பாடலை அனிருத் மற்றும் ஹிப் ஹாப் தமிழா ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். ஹிப் ஹாப் தமிழா ஏற்கனவே அனிருத்தின் இசையில் பாடியுள்ளவர் என்பதால் இதில் அனிருத்துடன் மிகவும் ஒன்றிப்போய் அபாரமாக பாடியுள்ளார்.

2. ‘பாலம்’ என்று ஆரம்பிக்கும் இனிய டூயட் பாடல். ஷங்கர் மகாதேவன் மற்றும் ஸ்வேதா மோகன் பாடிய இந்த பாடல் கேட்பதற்கு மிகவும் இனிமையாக உள்ளது.

3. செல்பி புள்ளே” என்று ஆரம்பிக்கும் சூப்பர் ஹிட் பாடல். விஜய் மற்றும் சுனிதி செளகான் பாடிய இந்த பாடல் சில நாட்களுக்கு முன்பே ரிலீஸாகி இணையத்தை கலக்கிய பாடல். இளையதளபதியின் குரலில் அமைந்துள்ள இந்த பாடல் அவரது ரசிகர்களுக்கு மட்டுமின்றி இளையதலைமுறையினர் அனைவரையும் கவரும் பாடல்.

4. ‘நீ யாரோ’ என்று தொடங்கு கே.ஜே.ஜேசுதாஸ் பாடிய பாடல். பல வருடங்கள் கழித்து ஜேசுதாஸின் கணீரென்ற குரலை கேட்டவுடன் சொர்க்கத்தில் மிதப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. நல்ல பாடல்.

5. ஆதி என்று தொடங்கும் இந்த பாடலை விஷால் டட்லானி மற்றும் அனிருத் பாடியுள்ளனர். மேற்கத்திய பாணியில் அமைந்துள்ள இந்த பாடல் இளைஞர்களை துள்ள வைக்கும்

இதுபோக பேட் பாஸ், மற்றும் கத்தி தீம் என்ற இரண்டு பாடல்களும் இந்த ஆல்பத்தில் இடம்பெற்றுள்ளன்.

கத்தி படத்தின் பாடல்களை சமூக வலைத்தளங்களில் பெரும்பாலானோர் விமர்சனம் செய்து வருகின்றன. இந்த படத்தின் பாடல்கள் பலரை கவர்ந்துள்ளது என்பது அவர்களிடம் இருந்து வெளிவரும் விமர்சனத்தில் இருந்து தெரிகிறது. விஜய் பாடிய செல்பி புள்ளே பாடல் இன்னும் சில வாரங்களுக்கு டிரெண்டில் இருக்கும் என்பது உண்மை. மிகச்சிலர் மட்டுமே செல்பி புள்ளே பாடலை மொக்கை என்று விமர்சித்துள்ளனர். இதுகூட விஜய்யை பிடிக்காதவர்கள் செய்யும் விமர்சனமாக இருக்கும் என கூறப்படுகிறது.

Leave a Reply