ரிசர்வேஷன் நிறுத்தம். தொடரும் பிரச்சனைகள். தடையின்றி வெளியாகுமா ‘கத்தி’?

kaththi copyவிஜய்,சமந்தா நடிப்பில் ‘கத்தி’ திரைப்படம் தீபாவளி தினத்தில் உலகம் முழுவதும் எவ்வித பிரச்சனையும் இன்றி வெளியாகும் என்று அனைவரும் நம்பிக்கை கொண்டிருக்கும் நிலையில் தமிழகத்தில் மட்டும் இந்த படத்தை வெளியிடுவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடைசி நேரத்தில் தமிழர் வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர்களின் அதிரடி அறிக்கையால் திரையரங்கு உரிமையாளர்கள் கத்தியை வெளியிட தயங்கி வருகின்றனர். நேற்று நடைபெற்ற தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள், விநியோகிஸ்தர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்ட் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.

இதனால் கத்தி படத்திற்கு இன்னும் ரிசர்வேஷனை எந்த தியேட்டரும் தொடங்கவில்லை. இருப்பினும் கத்தி படத்தை தமிழ்நாட்டை தவிர அனைத்து மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் வெளியிட லைகா நிறுவனம் செய்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் விஷாலின் பூஜை திரைப்படத்திற்கு விறுவிறுப்பாக ரிசர்வேஷன் புக் ஆகிக்கொண்டு இருக்கின்றது. ஒருவேளை கத்தி ரிலீஸாகாவிட்டால், பூலோகம், போன்ற ஒருசில படங்கள் திடீர் ரிலீஸாகும் என்றும் கூறப்படுகிறது

இந்நிலையில் நேற்று வெளியான ‘கத்தி’ படத்தின் டீஸர் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. கடைசி நேரத்தில் ஏதாவது அதிசயம் ஏற்பட்டு கத்தி பிரச்சனைகள் இன்றி வெளிவருமா? என்று ஆவலுடன் விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த தீபாவளி விஜய்க்கும் அவரது ரசிகர்களுக்கும் சிறப்பு தீபாவளியா? அல்லது சோக தீபாவளியா? என்று வரும் புதன்கிழமை தெரிந்துவிடும்

Leave a Reply