விஜய், சமந்தா நடிப்பில் உருவாகி வரும் ‘கத்தி” திரைப்படம் தீபாவளி திருநாளில் தடைகளை தகர்த்து வெளிவரும் என்றும் படத்தை வெளியிட தடை செய்ய நினைக்கும் சதிகாரர்களை முறியடிப்போம் என்றும் முருகதாஸ் கூறியுள்ளார்.
கத்தி படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தை ராஜபக்சேவின் நெருங்கிய நண்பர் என்ற வதந்தியை சில நாட்களுக்கு முன்னர் ஒரு சிலர் கிளப்பிவிட்டனர். ஆனால்ம், சீமான், நெடுமாறன் போன்றவர்களின் விளக்கத்தால் அந்த தகவல் பொய் என்று நிரூபணம் ஆனதும் தற்போது கத்தியின் கதை தன்னுடையது என்று ஒரு நபரை ஏற்பாடு செய்து கத்தி படத்திற்கு சில சதிகாரர்கள் இடைஞ்சல் கொடுத்து வருகின்றனர். இதற்கு பின்புலமாக இருப்பவர் யார் என்பதை தற்போது கண்டுபிடித்துவிட்டதாகவும், அவருடைய சதி ஒருபோதும் வெற்றியடையாது என்றும் முருகதாஸ் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
திருவள்ளுரை சேர்ந்த மிஞ்சுர் என்பவர் கத்தி படத்தின் கதை தன்னுடையது என்று வழக்கு தொடர்ந்துளார். அவர் யார் என்றே தனக்கு தெரியாது என்றும், ஆனால் அவர் தன்னுடைய கதையை என்னிடம் கூறியதாகவும், நான் அந்த கதையை படமெடுத்ததாகவும் கட்டுக்கதையை கூறி வருகின்றனர். உண்மையில் இவர் ஒரு அப்பாவி. இவரை கத்திக்கு எதிராக பலிகடாவாக ஒருசிலர் பயன்படுத்தி வருகின்றனர். இதேபோல் துப்பாக்கி படத்தின்போது வெளியான தகவல் பொய் என்று நிரூபணம் ஆனது போல் இந்த தகவலும் பொய் என்பதை நிரூபிக்க தயாராக இருப்பதாகவும் கூறிய முருகதாஸ் தரப்பு, விஜய் மற்றும் படக்குழுவினர் ரத்தம் சிந்திய உழைப்பால் உருவான கத்தியை தடுக்க செய்து வரும் சதியை முறியடிப்போம் என்று கூறியதாகவும் தெரிகிறது.