ஆசிபா வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும்: வழக்கறிஞர் தீபிகா

ஆசிபா வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும்: வழக்கறிஞர் தீபிகா

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி சமீபத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யபப்ட்டார் இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்த தடயங்களை மறைத்தும், அழித்தும் திசை திருப்பியதாக 3 போலீசார், ஒரு சிறுவன் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், கதுவா முதன்மை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று இந்த வழக்கின் விசாரணை தொடங்குகிறது

ஆனால், கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர், இந்த வழக்கு விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் ஜம்மு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்தால் நீதி கிடைக்காது என்றும் வலியுறுத்துகின்றனர். இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டை அவர்கள் நாடவும் முடிவு செய்துள்ளனர்.

‘கதுவாவில் விசாரணைக்கு உகந்த சூழ்நிலை இருக்கும் என நாங்கள் நினைக்கவில்லை. எனவே, கதுவாவில் வழக்கை விசாரிக்க கூடாது. வேறு நீதிமன்றத்திற்கு மாற்றுவது தொடர்பாக சிறுமியின் தந்தையிடம் ஆலோசனை நடத்தி அதன்பின் மனு தாக்கல் செய்யப்படும்’ என அவர்களின் வழக்கறிஞர் தீபிகா தெரிவித்தார்.

Leave a Reply