காத்மண்டு விமான நிலையம் திடீர் மூடல். அமைச்சர் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதால் பரபரப்பு
இரண்டு நாள் இந்திய சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு நேபாளம் திரும்பிய நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் சென்ற விமானம் காட்மண்டு விமான நிலையத்தில் இறங்கியபோது திடீரென விமானத்தின் டயர் வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் விமான நிலையத்தின் பாதுகாப்பு கருதி உடனடியாக விமான நிலையம் மூடப்பட்டது. விமானத்தில் இருந்த அமைச்சர் உள்பட 150 பயணிகள் அவசரமாக தரையிறக்கப்பட்டு ஓடுதளத்தில் இருந்து விமான நிலையத்திற்கு அழைத்து வந்தனர். டயர் வெடித்ததால் ரன்வே சேதம் அடைந்துள்ளதாகவும் ரன்வேயை சரிசெய்யும் பணிகள் நடந்து வருவதாகவும் காத்மாண்டு போஸ்ட் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நேபாள பிரதமர் பிரசண்டா நாளை வியாழக்கிழமை இந்தியா வர இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.