கற்றாழை தரும் கூல் ஷாப்பிங்
வீட்டுக்கு ஒரு கற்றாழைச் செடி இருந்தால் போதும், ஆரோக்கியமும் அழகும் ஃப்ரீ ஆஃப் காஸ்ட். கற்றாழையைக் கழுவி, அதன் சதைப் பகுதியை எடுத்து, எத்தனையோ அழகு சிகிச்சைகளைச் செய்ய முடியும். அதன் மருத்துவப் பலன்களும் ஏராளம். கற்றாழையைப் பயன்படுத்தி கிரீம், பேஸ்ட், ஷாம்பு, சோப் போன்றவை தயாரிக்கப்படுகின்றன. சந்தையில் கிடைக்கும் கற்றாழையைக்கொண்டு தயாரிக்கப்பட்ட, சில பொருட்கள் இங்கே…
வீ ட்டுக்கு ஒரு கற்றாழைச் செடி இருந்தால் போதும், ஆரோக்கியமும் அழகும் ஃப்ரீ ஆஃப் காஸ்ட். கற்றாழையைக் கழுவி, அதன் சதைப் பகுதியை எடுத்து, எத்தனையோ அழகு சிகிச்சைகளைச் செய்ய முடியும். அதன் மருத்துவப் பலன்களும் ஏராளம். கற்றாழையைப் பயன்படுத்தி கிரீம், பேஸ்ட், ஷாம்பு, சோப் போன்றவை தயாரிக்கப்படுகின்றன. சந்தையில் கிடைக்கும் கற்றாழையைக்கொண்டு தயாரிக்கப்பட்ட, சில பொருட்கள் இங்கே…
ஆலுவேரா டிரிங்க் 1/2 லி – ரூ154
தினமும் சிறிதளவு இதைத் தண்ணீருடன் கலந்து குடித்தால், உடல் வெப்பம் தணியும். நீர்க்கடுப்பு, கண் சூடு, வயிற்று வலி சரியாகும். கர்ப்பப்பை் தொடர்பான பிரச்னைகள் குணமாகும். சீரான, வலி இல்லா மாதவிலக்குக்கான வாய்ப்பு அதிகரிக்கும்.
டிஷ் வாஷ் 250 மி.லி – ரூ55
பாத்திரங்களைக் கழுவ ரசாயனத்தால் ஆன டிஷ் வாஷ்களைப் பயன்படுத்தினால், சருமப் பிரச்னைகள் ஏற்படும். உள்ளங்கையில் அரிப்பு ஏற்படும். ரசாயனம் இல்லாத கற்றாழைச் சாற்றால் தயாரான இந்த டிஷ் வாஷ், பாத்திரங்களைச் சுத்தப்படுத்துவதோடு, கைகளையும் பாதுகாக்கும்.
ஃபேஸ் பேக் 60 மி.கி – ரூ60
கற்றாழையும் வேப்பிலையும் கலந்து தயாரிக்கப்பட்ட ஃபேஸ் பேக் இது. சருமத் துவாரங்களில் உள்ள அழுக்குகளை நீக்கும். சருமம், மென்மையாகவும் மிருதுவாகவும் மாறும். சருமத்தில் குளிர்ச்சித்தன்மையை உணர முடியும்.
ஃபுட் கேர் – 70 மி.கி – ரூ101
மஞ்சள், இஞ்சி, சந்தனம், தேன், கற்றாழை ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட பாதத்துக்கான கிரீம். தொடர்ந்து, பாதத்தில் பூசிவந்தால், வெடிப்புகள், புண்கள் சரியாகும்.
ஜெல்லி 118 மி.லி – ரூ717
கற்றாழை ஜெல்லியைச் சருமத்தில் பூசிவந்தால், சூரியக் கதிர்களால் ஏற்படும் சருமப் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். குளித்த பிறகு சன் ஸ்கிரீன் போல இந்த கிரீமைப் பூசிக்கொள்ளலாம்.
கூந்தல் எண்ணெய் 80 மி.லி – ரூ159
கறிவேப்பிலை, தேங்காய் எண்ணெய், செம்பருத்திப் பூ, பிரம்மி, நெல்லிகாய் போன்ற பல்வேறு மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட கூந்தல் எண்ணெய். தொடர்ந்து பயன்படுத்துகையில், முடி உதிர்தல் பிரச்னை நின்று கேசம் உறுதியாகும். முடி வளர்ச்சியையும் தூண்டும்.
ஷாம்பு பவுச் – (34 பவுச் பாக்ஸ்) – ரூ68
கற்றாழை, வெட்டிவேர், நெல்லிக்காய் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட ஷாம்பு. பளபளப்பான, கருமையான கூந்தலைப் பெற உதவும். உடலும் குளிர்ச்சியாகும்.
சோப் – 75 மி.கி – ரூ40
கற்றாழை மற்றும் டீ ட்ரீ எண்ணெயால் தயாரிக்கப்படுகிறது. மூப்படைதலைத் தாமதப்படுத்தும். சருமச் சுருக்கங்கள் வராமல் தடுக்கும். இயற்கையான ஈரத்தன்மையைச் சருமத்தில் தக்கவைக்க உதவும்.