இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 12 வயது சிறுமி கோல்ட் கலரில் 3 அடி 4 இன்ச் நீளமுள்ள தலைமுடியை வளர்த்து சாதனை புரிந்துள்ளார்.
4 அடி 11இன்ச் உயரமே உள்ள 12 வயது பள்ளி மாணவியான கேட்டி ஒயிட் என்பவருக்கு 3 அடி மற்றும் 4 இன்ச் நீளமுள்ள தலைமுடி உள்ளது.
இவர் பிறந்ததில் இருந்தே இயற்கையாகவே அவரது தலைமுடி கோல்ட் கலரில் அமைந்துள்ளது என கூறப்படுகிறது.
இவர் தனது தலைமுடியை மொத்தம் மூன்று முறைதான் வெட்டியுள்ளார். மேலும் தனது தலைமுடியை அவர் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை வாஷ் செய்து டிரை செய்வதாகவும் கூறப்படுகிறது.
உலகின் மிக நீளமான கூந்தலை வைத்துள்ள ஆஷா மண்டேலா என்பவரின் சாதனையை முறியடிக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று கேட்டி ஒயிட் கூறியுள்ளார். ஆஷா மண்டேலாவுக்கு 55 அடி நீள கூந்தல் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.