கொளஞ்சியப்பர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு!

LRG_20150926110408970765

புரட்டாசி இரண்டாம் வெள்ளியொட்டி, கொளஞ்சியப்பர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. விருத்தாசலம்,  மணவாளநல்லுார், சித்தி விநாயகர் உடனுறை கொளஞ்சியப்பர் சுவாமி கோவிலில் நேற்று காலை பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர், தேன்  உள்ளிட்ட பொருட்களால் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, சந்தனக்காப்பு அலங்காரத்தில் சுவாமிகள் அரு ள்பாலித்தனர். அதேபோல், விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆழத்து விநாயகர், சுவாமி, தாயார், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர்  சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.  சந்தைதோப்பு அங்காள பரமேஸ்வரி கோவில், ஜங்ஷன்ரோடு ஜெகமுத்து மாரியம்மன்  கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

Leave a Reply