விஜய்சேதுபதி-டி.ராஜேந்தர் பட டைட்டில் அறிவிப்பு
முதல்முறையாக விஜய்சேதுபதி-டி.ராஜேந்தர் இணைந்து நடிக்கும் படம் ஒன்றை பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கி வருகிறார் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு 75% முடிந்துவிட்டது என்பதையும் அவ்வப்போது வெளிவரும் செய்திகளில் இருந்து பார்த்து வருகிறோம்,
இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘கவண்’ என்ற டைட்டில்தான் இந்த படத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. கிராமங்களில் சிறுவர்கள் விளையாடும் உபகரணங்களில் ஒன்றுதான் இந்த கவண். இந்த டைட்டிலில் என்ன விறுவிறுப்பான கதையை கே.வி.ஆனந்த் சொல்ல போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜயகாந்த், மடோனா செபாஸ்டியன், டி.ராஜேந்தர் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்து வருகிறார்.ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் பிரபல எழுத்தாளர்கள் சுபா திரைக்கதை-வசனம் எழுதி வருகின்றனர்.