எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை, ஏமாற்றத்துடன் திரும்பினர்: கேசி வீரமணி பேட்டி!

தன்னுடைய வீட்டில் சோதனை செய்ய வந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் எந்தவித ஆதாரமும் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர் என முன்னாள் அதிமுக அமைச்சர் கே சி வீரமணி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் கேசி வீரமணிக்கு சொந்தமான பல இடங்களில் நேற்று ஒரே நேரத்தில் அதிரடியாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்தனர். தங்கம், வெள்ளி, வைரம், சொகுசு கார்கள், ரொக்கம் என பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது

ஆனால் நேற்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் கேசி வீரமணி லஞ்ச ஒழிப்பு துறையினர்களுக்கு எந்தவித ஆதாரமும் கிடைக்கவில்லை என்றும் அதனால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்கள் என்றும் எந்த வழக்காக இருந்தாலும் அதை நீதிமன்றத்தில் சட்டப்படி சந்திப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்