ஜல்லிக்கட்டுக்கு தடையை நீட்டிக்க வேண்டும். நடிகை சோனாக்ஷி சின்ஹா வற்புறுத்தல்

sonakshiசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘லிங்கா’ படத்தின் இரண்டு நாயகிகளில் ஒருவரான சோனாக்ஷி சின்ஹா சமீபத்தில் தனது டுவிட்டரில் ஜல்லிக்கட்டுக்கு தடை நீட்டிக்க வேண்டும் என்றும், காளைகளை காப்பாற்ற மத்திய அரசு முன்வர வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார். இவருடைய கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி பதிவு செய்யப்பட்டு வருகின்றது.,

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டை மத்திய அரசி சமிபத்தில் தடை செய்தது. இந்த தடையை நீக்க தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள், தமிழர் அமைப்புகள் ஆகியவை வற்புறுத்தி வருகின்றன. இந்நிலையில் மத்திய அரசு மீண்டும் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க புதிய சட்ட திருத்தம் கொண்டு வந்து அரசிதழில் ஆணை வெளியிட பரிசீலித்து வருகிறது.

இதை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்தேகர் உறுதி செய்துள்ளார். மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தலைவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சரத்குமார் உள்பட பலரும் இந்த தடையை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வரும் நிலையில் சோனாக்ஷி சின்ஹா ஜல்லிக்கட்டு தடையை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply