மோடி இந்தியாவின் பிரதமரா? ரிலையன்ஸ் நிறுவனத்தின் மாடலா? டெல்லி முதல்வர் கேள்வி

மோடி இந்தியாவின் பிரதமரா? ரிலையன்ஸ் நிறுவனத்தின் மாடலா? டெல்லி முதல்வர் கேள்வி

21ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் விளம்பர மாடலாக மாறி விட்டதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டியுள்ளார்.

முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனம் ‘ஜியோ’ என்னும் பெயரில் அதிவேக இணைய வசதியை அறிமுகப்படுத்துகிறது. இதுகுறித்து தினசரிகளில் தலைப்பு பக்கங்களில் முழுபக்க அளவில் விளம்பரங்கள் வெளியாகியிருந்தன. இந்த விளம்பரங்களில் பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் ‘பிரதமரின் டிஜிட்டல் இந்தியா கனவை ஜியோ நனவாக்கும்’ என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.

இந்த விளம்பரம் குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டரில் கூறியபோது, ‘தனியார் நிறுவன தயாரிப்பை ஒரு நாட்டின் பிரதமர் எப்படி ஆதரிக்கலாம்? என்று கூறியதோடு, ‘மோடி அவர்களே!, நீங்கள் ரிலையன்ஸ் விளம்பரங்களின் மாடலாக மாறி விடுங்கள். உங்களுக்கு உழைப்பாளிகள் வரும் 2019-ம் ஆண்டு தக்க பாடம் புகட்டுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அம்பானியின் பாக்கெட்டுக்குள்தான் மோடி இருக்கிறார் என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் தேவை? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுபோன்ற புகைப்படங்களை வெளியிடும் முன்னதாக உரிய அனுமதி வாங்க வேண்டும். பிரதமரின் அனுமதி இல்லாமல் தனது விளம்பரத்துக்கு பயன்படுத்திய ரிலையன்ஸ் நிறுவனத்தின்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் மத்திய மந்திரியும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான அஜய் மக்கான் கூறியுள்ளார்.

Leave a Reply