பாஜக எம்.பி கீர்த்தி ஆசாத் அதிரடி சஸ்பெண்ட். அருண்ஜெட்லி விவகாரம் காரணமா?

பாஜக எம்.பி கீர்த்தி ஆசாத் அதிரடி சஸ்பெண்ட். அருண்ஜெட்லி விவகாரம் காரணமா?
keerthi azad
டெல்லி கிரிக்கெட் சங்க முறைகேடு விவகாரத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மீது புகார் கூறிய பாஜக எம்.பி. கீர்த்தி ஆசாத் அவர்களை பாஜக மேலிடம் அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளது. இதனால் பாஜக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமீத் ஷா கூறியபோது, “கட்சியின் விதிகளுக்கு புறம்பாக கீர்த்தி ஆசாத் செயல்பட்டதால் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக டெல்லி கிரிக்கெட் சங்க முறைகேடுகளில் அருண் ஜெட்லிக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் கீர்த்தி ஆசாத் அதிரடியாக குற்றஞ்சாட்டினார். மேலும் தனது டுவிட்டர் வலைப் பக்கத்தில், ‘அருண் ஜெட்லி மீது கீர்த்தி ஆசாத் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன் வைத்ததாகவும், நாடாளுமன்ற கூட்டத்தில் எதிர்கட்சியினர் அருண் ஜெட்லிக்கு எதிராக குரல் எழுப்பிய போது, கீர்த்தி ஆசாத்தும் அவர்களுக்கு ஆதரவாக பேசியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து கீர்த்தி ஆசாத் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். டெல்லி கிரிக்கெட் சங்கத் தலைவராக 13 ஆண்டுகள் பதவியிலிருந்த அருண் ஜெட்லி முறைகேடுகளில் ஈடுபட்டதாக டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலும் குற்றம்சாட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply